தாய்லாந்தில் இருந்து தென்கொரியாவிற்கு பயணம் செய்த விமான விபத்தில் லீ மற்றும் குவான் ஆகிய பணிப்பெண்கள் மட்டும் உயிர்தப்பினர்.
தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து, 175 பயணிகள், 6 ஊழியர்கள் என 181 பேருடன் தென்கொரியாவுக்கு புறப்பட்ட பயணியர் விமானம், அந்நாட்டின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் இருந்து விலகி, கான்கிரீட் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில், 179 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 32 வயதான லீ மற்றும் 25 வயதான குவான் ஆகிய இரு விமானப் பணிப்பெண்கள் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இவர்கள் இருவரும் இடிபாடுகளில் வால் பகுதியில், பயணிகளுக்கு உதவி செய்ய பணியில் இருந்துள்ளனர்.
என்ன நடந்தது? நான் ஏன் இங்கே இருக்கிறேன்?' என தென்கொரியா விமான விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் இருவர் டாக்டரிடம் கேட்டுள்ளனர்.
இவர்கள் இருவரால் விபத்தை நினைவுப்படுத்த முடியவில்லை. இவர்கள் இருவரிடம் உடல்நிலை குறித்து விசாரித்த போது அவர்கள் சுயநினைவை இழந்தது தெரியவந்தது. அவர்கள் பயத்தில் இருக்கிறார்கள்.
32 வயதான லீ என்பவருக்கு இடது தோள்பட்டை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
மற்றொரு விமானப்பணிப் பெண் 25 வயதான குவானுக்கு கணுக்கால் எலும்பு முறிவு மற்றும் அடிவயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவர் உயிருக்கு ஆபத்து இல்லை. இவர்கள் சுயநினைவுயின்றி இருப்பதால், விபத்து குறித்து விவரங்கள் ஏதும் சேகரிக்க முடியவில்லை. இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்ததாக, தென் கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.