கொழும்பு - மருதானை பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணொருவர் கொலை எம்.பி சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு
கொழும்பு - மருதானை பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்திற்கான நீதியை உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.
பாராளுமன்றில் அவர் இந்த விடயத்தை பிரஸ்தாபித்தார்.
அதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜய பால,
இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஆராயந்து பதிலளிப்பதாக தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக்க மானப் பெருமவை தொடர்பு கொண்டு கேட்ட போது
மருதானை பொலிஸ் நிலையத்தில் தற்கொலை சம்பவமொன்று பதிவாகியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண் அதிகாலை 4 மணிக் கும் 4.30 மணிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவே ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதற்கு அமையவே கொலையா, தற்கொலையா என்ற முடிவுக்கு வர முடியும்.
இருப்பினும் இதுவரையில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுக்கு அமைய குறித்த பெண் தற்கொலை செய்துள்ளமையே தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் மீது போதைப்பொருள் பாவனை குறித்த பிடியாணையுள்ளமையும் குறிப்பிடத்தக்கது - என்றார்.