அமெரிக்க நியூயோர்க்கில், சீன அரசின் சார்பில் இரகசியப் பொலிஸ் நிலையம் நடத்தப்படுதாகத் தகவல்

3 months ago



அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், சீன அரசாங்கத்தின் சார்பில் இரகசியப் பொலிஸ் நிலையமொன்று நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் உளவுத்துறையின் உத்தரவுக்கு அமைய, சென்ஜின்பிங் என்பவரும் லுஜியான் வாங் என்பவரும் நியூயோர்க் நகரத்தில் உள்ள கட்டடமொன்றில் இரகசியப் பொலிஸ் நிலையத்தை அமைத்துள்ளனர்.

இந்தப் பொலிஸ் நிலையம், அமெரிக்காவை உளவு பார்ப்பதற்குச் சீனாவால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த இரகசிய பொலிஸ் நிலையத்தை, அமெரிக்காவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்க சீனா பயன்படுத்தியுள்ளது.

உலகில் 53 நாடுகளில் இவ்வாறான பொலிஸ் நிலையங்களை சீனா இயக்கி வருகின்றது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அமெரிக்காவால் குறிப்பிடும் கட்டடம் சீனாவுக்குச் சொந்தமானது என்பதை ஏற்கின்றோம்.

ஆனால், சீனர்களுக்கான உதவிகளை வழங்குவதற்காகவே அந்தக் கட்டடம் பயன்படுத்தப்பட்டது.

வேறெந்த நோக்கங்களுக்காகவும் அது பயன்படுத்தப்படவில்லை என்றும் சீனா மேலும் கூறியுள்ளது.



அண்மைய பதிவுகள்