இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான மனிதாபிமான மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள மீனவர்களை விரைவில் விடுவிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மாகாண மக்களுக்கான இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பு தொடர்பிலும் மீன்பிடித்துறையின் அபிவிருத்தி உதவித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
