வவுனியாவில் நிலநடுக்கம்?

6 months ago

வவுனியாவின் பல பகுதிகளில் நேற்று இரவு 11.30 மணியளவில் பெருவெடிப்புச் சத்தமும் இலேசான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன.

இது நில நடுக்கமா என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருந்தனர்.

வவுனியாவின் நெலுக்குளம், பட்டாணிச்சூர், சூடுகண்டபுலவு, செட்டிகுளம், வீரபுரம் ஆகிய பகுதிகளிலேயே இந்த பெரு வெடிப்புச் சத்தமும் அதன் தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன.

எனினும் இந்தச் செய்தி அச்சுக்குப்போகும் வரையில் அது நிலநடுக்கமா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை