உலகளவில் 38 சதவீத மர இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2 months ago



உலகளவில் 38 சதவீத மர இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கொலம்பியாவின் காலி நகரில் நடந்த ஐ. நா. பல்லுயிர் மாநாட்டிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக நாடுகள் பல பங்கேற்ற இந்த மாநாட்டில், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பின் எச்சரிக்கை பட்டியலில் (சிவப்பு பட்டியல்) உலகில் 3இல் ஒரு பங்கு மரங்கள் அழியும் நிலையில் உள்ளன என சுற்றுச்சூழலுக்கான விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

விவசாயத்துக்காக காடுகளை அழித்தல் மற்றும் வர்த்தக          பயன்பாட்டிற்காக மரங்களை    வெட்டுதல் உள்ளிட்ட மனித        நடவடிக்கைகள் மர இனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவையாக உள்ளன.

பூச்சிகள் மற்றும் நோய்கள் உள்ளிட்டவையும் மித அளவிலான தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் மரங்களின் அழிவுக்கு வழிவகுக்கின்றன.

இதனால், மரங்களை சார்ந்து வாழக் கூடிய பிற இனங்களும் பெரிய அளவில் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன.

இவற்றில் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் பூச்சிகளும் அடங்கும்.

இந்த நெருக்கடிக்கு எதிராக, மர இனங்களை அழியும் நிலையில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும்                      தெரிவிக்கப்பட்டது.