இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடலில் பல நாள் மீன்பிடிப் படகில் காயமடைந்த மீனவர் மீட்பு.

3 months ago


இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடலில் பல நாள் மீன்பிடிப் படகில் காயமடைந்த மீனவர் மீட்பு

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவைப் படகிலிருந்த காயமடைந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை யினர் கரைக்குக் கொண்டு வர உதவி புரிந்தனர்.

கொழும்பு கடல்சார் மீட்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் கடல் பகுதியில் வணிகக் கப்பல் மூலம் நேற்று மீனவர் மீட்கப்பட்டுள்ளார்.

பியூலா -02 என்ற உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு 07 மீனவர் களுடன் வென்னப்புவ மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 17ஆம் திகதி புறப்பட்டதாகத் தெரிவிக் கப்படுகிறது.

இதற்கிடையில் மீன்பிடி படகிலிருந்த பணியாளர் ஒருவருக்கு மீன்கடித்து காயம்  ஏற்பட்டதாகவும் அவசர       சிகிச்சைக்காக கரைக்கு மாற்றுவதற்கு கடற்படையின் உதவியைக் கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய, கொழும்பு கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள எம். ரி.கியெல் எக்ஸ்பிரஸ் எனும் கப்பல் இழுவைப் படகு இருந்த இடத்துக்கு அனுப் பப்பட்டு மீனவரை மீட்டு முதலுதவியளித்ததன் பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அண்மைய பதிவுகள்