போயா தினத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த இடம் ஒன்று யாழ்ப்பாணத்தில் முற்றுகையிடப்பட்டது.
போயா தினத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த இடம் ஒன்று யாழ்ப்பாணத்தில் முற்றுகையிடப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கச்சேரி கிழக்குப் பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
போயா தினமான இன்று மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது என்று யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
இதற்கமைய புலனாய்வுப் பிரிவினரும் யாழ். மாவட்ட போதை ஒழிப்பு பிரிவும் இனைந்து அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது போயா தினத்தில் மதுபானம் விற்பனை செய்த இடம் முற்றுகை இடப்பட்டு அங்கிருந்த பெருமளவான மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபானம் சந்தேகநபருடன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.