
பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத ஐக்கிய தேசியக் கட்சியின் முன் னாள் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரனுக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு விசேட அபிவிருத்தி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான த. சித்தார்த்தன், சி. சிறீதரன், எம். ஏ. சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ. கஜேந்திரன் ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாத னுக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான விஜயகலா மகேஸ்வரன் சமர்ப்பித்த 19 கோடி ரூபாய் பெறுமதியான திட் டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.
இதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் க. விக்னேஸ்வரனுக்கு இதுவரை விசேட நிதி ஒதுக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக் கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
