இந்தியாவின் தஞ்சாவூர் இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சிறீமத் சுவாமி விமூர்த்தானந்தா ஜீ மகராஜ் மட்டக்களப்புக்கு வருகை.
இந்தியாவின் தஞ்சாவூர் இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சிறீமத் சுவாமி விமூர்த்தானந்தா ஜீ மகராஜ் மட்டக்களப்புக்கு வருகை தந்தார்.
இவரது ஆளுமை விருத்தி தொடர்பிலான ஆன்மீகச் சொற் பொழிவு, காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் - சாரதா நலன்புரி நிலையத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
விமூர்த்தானந்தா ஜீ சுவாமிகளுடன் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் துறவி சிறீமத் சுவாமி இராஜேஸ்வரானாந்த ஜீ மகராஜ், மட்டு. மாநில இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சிறீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ சுவாமி மாத்ருசேவானந்தர் ஜீ மகராஜ் ஆகியோரும் வருகை தந்தனர்.
முன்னதாக விமூர்த்தானந்தா ஜீ சுவாமிகள் காரைதீவு சிறீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்து பின்னர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த வீட்டுக்கு சென்று சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து வணங்கினார்.
தொடர்ந்து காரைதீவு சிறீசாரதா நலன்புரி நிலையத்துக்கு வந்தார். அங்கு சுவாமி விபுலானந்தர் பணிமன்ற ஆலோசகரும் இராமகிருஷ்ண மிஷன் சிவானந்தா பழைய மாணவனுமான வி. ரி.சகாதேவராஜாவின் நெறிப்படுத் தலில் ஆன்மீகச் சொற்பொழிவில் பங்கேற்றார்.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் கல்லடி ஆச்சிரம பொது முகாமையாளர் சிறீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீமகராஜ் அறிமுக உரை நிகழ்த்தினர். தொடர்ந்து சுவாமி மாத்ரு சேவானந்தா ஜீ மகராஜ் பஜனை பாடினார்.
இராமகிருஷ்ண மிஷன் அபிமானிகள், மாணவர்கள் கலந்து கொண்டு விமூர்த்தானந்தா சுவாமியின் சொற்பொழிவை கேட்டு பயன் பெற்றனர்.