இந்தியாவின் 2ஆவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி -முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.

4 months ago


இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம், சிறீ பெரும்புதூர் அருகே மகளிர் தங்கும் விடுதிக்கான கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர்

மேலும் தெரிவித்தவை வருமாறு.

கடந்த 2021 ஆம் ஆண்டு தி. மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம்.

2030ஆம் ஆண்டுக்குள். ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி யடைய வேண்டும் என்று நான் ஓர் இலட்சிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்பான செயல்பாடுகள், அந்த இலக்கை நாம் விரைவாக எட்டுவோம் என்று நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என்றார். 

அண்மைய பதிவுகள்