ஒற்றையாட்சியை தமிழர் தரப்பு ஆதரித்தால் அரசியலிலிருந்து விலகிவிடுவேன் -- எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு

2 months ago



ஒற்றையாட்சி சித்தாந்தம் கொண்ட புதிய அரசமைப்பை தமிழ் மக்கள் ஆதரிக்கக்கூடாது. அவ்வாறு ஆதரித்தால் அரசியலிலிருந்து விலகிவிடுவேன். இவ்வாறு கூறியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் எம்.பி.

புதிய அரசமைப்பு தொடர்பாக நேற்றைய தினம் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யாழ்ப்பாணத்தில் விருந்தினர் விடுதி ஒன்றில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் அவர் மேலும் கூறியவை வருமாறு-

ஒற்றையாட்சி சித்தாந்தம் கொண்ட புதிய அரசமைப்பை தமிழ் மக்களின் ஆதரவுடன் நிறைவேற்ற தற்போதைய அரசாங்கம் முயல்கிறது.

இது பாராளுமன்றில் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கும் பலம் தமிழர் தரப்பிடம் கிடையாது இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்போது தமிழர்கள் ஆதரித்தால் இந்த நாட்டில் எமது மக்களுக்கு எதிர்காலம் கிடையாது.

தமிழரின் ஆதரவுடன் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் நான் அரசியலிலிருந்து விலகிவிடுவேன்.

ஏனெனில் அதன் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை நாம் மேற்கொள்வது அர்த்தமற்றது.- என்றார்.