யாழ்.இளவாலையில் சிறுமி ஒருவரை அனுப்பி பிறிதொரு சிறுமியிடமிருந்து தங்கச் சங்கிலியை அபகரித்த பெண் கைது
2 months ago

சிறுமியொருவரை அனுப்பி பிறிதொரு சிறுமியிடமிருந்து தங்கச் சங்கிலியை அபகரித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை - உயரப்புலம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலியைக் காணாததையடுத்து, அவரின் குடும்பத்தினர் அது தொடர்பில் வினவியுள்ளனர்.
இதன்போதே, பிறிதொரு சிறுமி அந்தச் சங்கிலியைப் பெற்றுச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மற்றைய சிறுமியை அழைத்து விசாரித்தபோது அவர், தனது தாயாரின் அறிவுறுத்தலுக்கு அமையவே இவ்வாறு செயற்பட்டதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, இளவாலைப் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட் டுக்கு அமைய சந்தேகநபரான தாய் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
