வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி மரத்திலேறி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

4 months ago


மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக ஒருவர் மரத்திலேறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை பர பரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா - பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரத்திலேறி போராட்டத்தில் ஈடுபட்டார். தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்று விட்டார் என்றும் அவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரியே அவர் மரத்திலேறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

நீண்டநேரம் மரத்திலிருந்து இறங்காமல் போராடியவரை ஒருவழியாக பொலிஸார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.