யாழ்.வேலணையில் தொலைக்காட்சி பார்ப்பதற்காக, மின் இணைப்பினை இணைக்க முற்பட்ட 9 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்
2 months ago

தொலைக்காட்சி பார்ப்பதற்காக, தொலைகாட்சிக்கு மின் இணைப்பினை இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளான்.
யாழ்ப்பாணம், வேலணை பகுதியைச் சேர்ந்த சந்திரஹாசன் கனிஸ்டன் (வயது 09) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்
சிறுவனின் தாயார் அருகில் உள்ள வீடொன்றுக்கு சென்ற வேளை வீட்டில் இருந்த சிறுவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக தொலைக்காட்சிக்கு மின் இணைப்பை இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சிறுவனின் உடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
