இந்திய இழுவைமடி மீன்பிடிப் படகுகளின் அத்துமீறல் காரணமாக 700 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் வடக்குக் கடற்பரப்பில் மீண்டும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவரும் நிலையில், அத்துமீறிய மீன்பிடிக்காக கடந்த இரண்டு வாரங்களில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகு மோதி ஸ்ரீலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததையடுத்து இந்த விடயங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் பூதாகரமான விடயங் களாக மாற்றம் பெற்றுள்ள நிலையி லேயே, அத்துமீறிய மீன்பிடி தொடர் பான பாதிப்புகளை இந்திய அரசாங்கத்துக்கு இலங்கை தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலும் சில விடயங்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
