தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற ரீதியில் என்னை எந்தப் பிரதான கட்சிகளின் தலைவர்களும் பேச அழைத்தாலும் செல்லப்போவதில்லை. அரியநேத்திரன் தெரிவிப்பு.

3 months ago


தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற ரீதியில் என்னை எந்தப் பிரதான கட்சிகளின் தலைவர்களும் பேச அழைக்கவில்லை. அவர்கள் அழைத்தாலும் நான் செல்லப் போவதுமில்லை.

எடுத்த முடிவில் இறுதிவரை பயணிப்பேன் - இவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று செய்தியா ளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், "தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் வெற்றியை அல்லது இலக்கை உடைப்பதற்கு இப்போது பல சக்திகள் இறங்கியுள்ளன.

இந்த நபர்களால் இன்னும் சில தினங்களில் அல்லது தேர்தலுக்கு முதல் நாளிலோ என்னைப் பற்றி துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப் படலாம்.

"நான் தேர்தலில் இருந்து ஒதுங்கி விட்டேன் என்றுகூட அவர்கள் துண் டுப்பிரசுரங்கள், காணொலிகளை வெளியிடக்கூடும். இவை எதையும் மக்கள் நம்ப வேண்டாம்.

விருப்பு வாக்கு, விருப்பத் தேர்வு என்னும் விடயத்தில் பலர் மக்களை குழப்பமடையச் செய்கின்றனர்.

தமிழ் மக்கள் குழம்பக்கூடாது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே எனது சங்கு சின்னத்துக்கு மட்டும் ஒரு புள்ளடியிடுங்கள் - அவ்வளவுதான்.

பொது வேட்பாளர் விவகாரம் இங்கு மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனென்றால், எங்கள் விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் எல் லோருமே தவறு விட்டிருக்கின்றார்கள்.

இலங்கை மட்டும் எங்களை ஏமாற்ற வில்லை - இந்தியாவும் எங்களை ஏமாற்றி இருக்கின்றது.

இறுதிப் போரில் இனப்படுகொலையை செய்வதற்காக பல நாடுகள் இலங்கைக்கு துணை போயிருக்கின்றன. எனவே, அவர்கள் அனைவருக்கும் ஒரு மனச்சாட்சி இருக்கின்றது.

இணைந்த வடக்கு - கிழக்கில் ஓர் அரசியல் தீர்வை தமிழர்களுக்கு வழங்க அவர்கள் தவறியிருக்கின்றார்கள்.

இந்தத் தவறை சுட்டிக்காட்ட வேண்டிய உரிமை வடக்கு - கிழக்கு மக்களுக்கு இருக்கிறது.

அதை ஒரு ஜனநாயக வடிவமாக இந்தத் தேர்தலில் நாங்கள் காட்ட வுள்ளோம் - என்றார்.