பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அலுவலகம் மூடப்பட்டது.
3 months ago

பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த டிசெம்பர் 31ஆம் திகதியுடன் ஓய்வுபெற்றிருந்தார்.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில், இதுவரை அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் சவேந்திர சில்வா, பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக பணியாற்றிய காலத்தில் பயன்படுத்திய அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சவேந்திர சில்வாவின் பாதுகாப்புக்கு இணைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் ஆகியோர் தற்போது அவரவர் பணியாற்றும் சொந்த இராணுவ படைப் பிரிவுகளுக்கு மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
