யாழில், மனவிரக்தியடைந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த விஜயரட்ணம் யோகேஸ்வரன் (வயது 58) என் பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நீண்ட காலத்திற்கு பின்னர் பிரான்ஸில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். இவரது 3 பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
மன விரக்தியில் இருந்த இவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நம சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.