வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் இந்தியா.-- துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் திடீரென தோற்றம் பெற்றார். தற்போது அவரைக் காணவில்லை.
தேர்தலில் போட்டியிடுவதும், அதன் பின்னர் மாயமாவதும்தான் அவருக்குரிய ஒப்பந்தம்.
அவர் தற்போது அரசியலில் இல்லை. தமிழ் பொது வேட்பாளர் எதற்காக வந்தார்? யாரின் நோக்கத்தை நிறைவேற்ற களமிறங்கினார்?
கடந்த பொதுத்தேர்தல் பெறுபேறுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, யாழில் வாக்குகள் சிதறியுள்ளன.
தமிழ் தேசிய அரசியல் ஒரு விதத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அன்று வடக்கு பிரச்னையை பயன்படுத்தியே இந்தியா நாட்டுக்குள் நுழைந்தது. இன்று அதற்கான தேவைப்பாடு இல்லை. ஏனெனில் கொழும்பு அரசு எல்லாவற்றுக்கும் உடன்பட்டுள்ளது.
இவ்வாறு தெற்கு ஊடாக இந்திய தலையீடு வரும் போது வடக்கில் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் தமிழ் தேசிய அரசியலையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடு இந்தியாவுக்கு உள்ளது.
அர்ச்சுனா போன்றவர்களை கொண்டுவந்து என்ன செய்ய போகின்றார்கள்? -என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
