இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை என்று புதிய ஜனாதிபதி அநுரகுமார ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வலுவான சுயாதீன வெளிவிவகார கொள்கை என்ற அணுகுமுறைக்கான விருப்பத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச சஞ்சிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
புவிசார் அரசியல் மோதல்களில் இருந்து விலகியிருப்பதற்கான தனது அரசாங்கத்தின் விருப்பத்தை அநுர குமார வெளியிட்டுள்ளார்.
அவரின் தலைமைத்துவத்தின் கீழ் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையின் இரண்டு நெருங்கிய அயல் நாடுகளான சீனா, இந்தியாவுடன் சமநிலையான உறவுகளை பேண முயலும் என குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் தன்னை இணைத் துக்கொள்ள முயலாது என கூறியுள்ளார்.
புவிசார் அரசியல் மோதலில் நாங்கள் ஒரு பகுதியாக மாறமாட்டோம். எந்த தரப்புடனும் இணைந்து கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ள புதிய ஜனாதிபதி, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் துண்டாடப்படுவதற்கு நாங்கள் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளும் பெறுமதிமிக்க நணபர்கள்,எங்கள் அரசாங்கத்தின் கீழ் நாங்கள் அவர்கள் நெருங்கிய சகாக்களாக மாறுவதை விரும்புகின்றோம் என அனுரகுமார தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய, மத்திய கிழக்கு, ஆபிரிக்காவுடனும் சிறந்த உறவை பேண விரும்புகின்றோம் என அவர் கூறினார்.