வடக்கில் அதி பெறுமதி கூடிய திட்டம். யாழ்ப்பாணத்திற்கான ஆற்றுநீர் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும். இதனால் யாழ்ப்பாணத்தின் நீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்- ஜனாதிபதி தெரிவிப்பு.

5 months ago


யாழ். தாளையடி கடல்பிரதேசத்தில் உள்ள கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இங்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“இது வடக்கில் அதி பெறுமதி கூடிய திட்டம். யாழ்ப்பாணத்திற்கான ஆற்றுநீர் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும். இதனால் யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

வடமராட்சி பிரதேசம் செழிப்புறும் என்றும், தற்போதைய கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தில் மின்சார செலவீனம் அதிகரிப்பதால் நீரின் பெறுமதி அதிகமாக காணப்படும்.

இதனால் சூரிய மின்சக்தியை பயன்படுத்தி உற்பத்தி செலவீனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்ததுடன், மேலும் யாழில் சிமாட் விவசாயம் மேற்கொள்ளவதற்குரிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

இந்தியா நிதி உடன் படிக்கையில் காங்கேசன்துறை நவீன மயமாக்கப்படும் என்றும், பலாலியை அபிவிருத்தி செய்து சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும்.

வரும் காலங்களில் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த ஒரு பிரதேசமாக மாறும்.

தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்க்கு உதவியளித்த ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேவேளை தாளையடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தாளையடிக்கான கிராம சேவகர் பிரிவை உடனடியாக செயற்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.” என்றார்