கடந்த காலத்தில் பல இரத்தக் கறைகள் உள்ளன. அவற்றை நாம் கண்ணீர் விட்டு அழித்து விட முடியாது - நினைவுப் பேருரையில் வீரமணி தெரிவிப்பு.

4 months ago


கடந்த காலத்தில் பல இரத்தக் கறைகள் உள்ளன. அவற்றை நாம் கண்ணீர் விட்டு அழித்து விட முடியாது. மீண்டும் நாம் வாழ் வதற்கு இத்தனை இடர்பாடுகள் எமக்குள் இருந்தாலும் நாம் ஓரணியாக ஒன்று திரள வேண்டும் இவ்வாறு தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவு பேருரை நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தனது உரையில், நாம் இன்னும் உரிமைகளைப் பெறவில்லை. நாம் இலட்சக்கணக்கில் ஆயிரக்கணக்கில் மிகப் பெரிய இழப்புகளை பெற்றுள்ளோம். நாம் சிந்திக்கிறபோது அனைவரும் ஒற்றுமையாக சிந்திக்க வேண்டும்.

அமிர்தலிங்கம் மிகப் பெரும் ஆளுமை உள்ள மனிதர். எனவே, அவர் பல்வேறு வழிமுறைகளில் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் தனது கருத்துகளை விட்டுச் சென்றார். அவற்றைப் பற்றி சிந்திக்கின்றபோது இங்கே உள்ள புகைப்படம் ஞாபகம் வருகிறது.

தந்தை செல்வா தொடங்கி எவ்வுலகில் இருந்தாலும் இந்த ஊரில் இருந்தாலும் மக்களுடைய பிரச்னைகளை நாம் படிக்கட்டாக மாற்றி, மறக்கப்பட்ட இனத்தை மீண்டும் விழிப்புணர்வுடன் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஓரணியாக திகழ வேண்டும் - என்றார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், முன்னாள் பாராளு மன்ற முன்னாள் உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிறேமச்சந்திரன், எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.