இலங்கையில் கர்ப்பவதிகள், குழந்தைகளிடையே நீரிழிவு நோய் தாக்கம் அதிகரிப்பு. சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் கர்ப்பவதிகள், குழந்தைகளிடையே நீரிழிவு நோய் தாக்கம் அதிகரிப்பு. சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பவதி தாய்மார் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டி யுள்ளனர்.
தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு தேசிய மருத்துவம னையின் நீரிழிவு மற்றும் ஓமோன்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் உதித புளுகஹபிட்டிய தெரிவித்துள்ளார்.
நீரிழிவு நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூறிய அவர்,
நாம் அனைவரும் நீரிழிவு நோயின்றி வாழ முயற்சி செய்ய வேண்டும். அதற்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதிக இனிப்பு உணவுகளை குறைத்து, அதிக காய்கறிகள், இறைச்சி, மீன் உள்ள உணவில் கவனம் செலுத்தி, ஒருவருக்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய், உயர் அழுத்தம், கொலஸ்ரோல், கழுத்துப் பகுதியில் கருப்பு நிறம், முகப் பகுதியில் முடி வளர்வது போன்ற நிலைகள் இருந் தால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோயை பரிசோதிப்பது முக்கியம் - என்றும் அவர் கூறினார்.