வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் முன்னெடுத்த போராட்டம் 3,000 ஆவது நாளை அடைந்து நேற்றும் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
1 month ago




வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை போராட்டமானது 3,000 ஆவது நாளை அடைந்துள்ள நிலையில், நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியா தபால் திணைக்களத்திற்கு அருகில் 3,000 நாளாகப் போராட்டம் மேற்கொள்ளும் கொட்டகைக்கு முன்பாக இந்தப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் உருவப் படத்தைத் தாங்கியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளைத் தாங்கியவாறும் தாய்மார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
