இந்தியா தமிழ்நாடு மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து நாட்டுப் படகுமூலம் 9 பேர் யாழ்.நெடுந்தீவு வருகை!
மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து நாட்டுப் படகுமூலம் 9 பேர் யாழ்.நெடுந்தீவு வருகை!
இந்தியா- தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் இன்று (நவம்பர் 09) மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்.
நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் நாட்டுப் படகு மூலம் இன்று மாலை வந்தடைந்தவர்கள் திருலிங்கபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அனைவரும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதன் பின்னர் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்
அனைவரும் மாவிலித்துறை பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் திருகோணமலை , மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 03 ஆண்கள், 03 பெண்கள், 03 சிறார்கள் என 09 பேர் இன்றையதினம் காலை தமிழகத்தில் இருந்து புறப்பட்டு மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.