இலங்கையில் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி.
3 months ago
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காகத் தற்போதுள்ள நீர்மூலங்களின் மேல் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.
அதற்கமைய, மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக ரந்தெணிகல, மொரகஹகந்த மற்றும் கலாவாவி ஆகிய 03 பிரதான நீர்த் தேக்கங்களை மஹாவலி அதிகார சபை அடையாளம் கண்டுள்ளது.
மேற்குறித்த இடங்கள் தொடர்பாக முன்னதாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, ரந்தெணிகல, மொரகஹகந்த மற்றும் கலாவாவி ஆகிய நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கு இலங்கைக மின்சார சபைக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.