நல்லைக்குமரன் மலர் வெளியீடு 32 மற்றும் யாழ்.விருது வழங்கும் நிகழ்வு இன்று நல்லூர் நல்லை ஆதீன திருஞான சம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ் மாநகராட்சி மன்றம்,சைவ சமய விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் நல்லைக்குமரன் மலர் வெளியீடு 32 மற்றும் யாழ் விருது வழங்கும் நிகழ்வு இன்று நல்லூர் நல்லை ஆதீன திருஞான சம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் சைவ சமய விவகாரக் குழுவின் தலைவரும் யாழ் மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்னேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி சி.சற்குணராஜா கலந்து கொண்டார்.
இதில் நல்லைக்குமரன் மலர் வெளியீடு 32 வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதற்பிரதியினை யாழ்.பல்கலை க்கழக துணைவேந்தர் கலாநிதி சி.சற்குணராஜா, சைவ சமய விவகாரக்குழுவின் தலைவரும் யாழ்.மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்னேந்திரன் ஆகியோர்கள் இணைந்து வெளியீட்டு வைக்க தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தான தலைவரும் சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் ஏனையோர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இவ்வாண்டு யாழ் விருது வழங்கல் யாழ் போதனா வைத்தியசாலை மகபேற்று நிபுணர் ந.சரவணபவாவுக்கு வழங்கப்பட்டதுடன் பொற்கிழி பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
நல்லைக்குமரன் மலர் வெளியீடு 32 க்கான ஏற்புரை,சிறப்புரை, கவிப்புரை, நயப்புரை, என்பன இடம்பெற்றதுடன் மதத்தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தான தலைவரும் சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் ,நல்லை ஆதீன குரு முதல்வர் தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ் மாநகராட்சி மன்றம், சைவ சமய விவகாரக்குழுவின் நிர்வாகத்தின் உறுப்பினர்கள், ஓய்வு நிலை பெற்ற யாழ்.பல்கலைகழக வாழ் நாள் பேராசிரியர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.