கடந்த காலம் போல் இந்தக் காலமும் மக்களை ஏமாற்றும் வேட்பாளர்கள்- ஜே.வி.பி சந்திரசேகர் தெரிவிப்பு
5 months ago
கடந்த கால அரசாங்கங்கள் வடக்கு மாகாண மக்களை ஏமாற்றியது போல தற்போதைய வேட்பாளர்களும் அவர்களை ஏமாற்றி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
இலங்கை அரசாங்கம் ரணில் மற்றும் ராஜபக்சக்கள் எல்லோரும் வடக்கை வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். வடக்கை நோக்கி இவர்கள் படையெடுத்து வருவது ஏன்?
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருகின்ற போது பொதுவாக மக்களை ஏமாற்றினார்கள் கடந்த கால அரசாங்கங்கள் வடக்கு மாகாண மக்களை ஏமாற்றியது போல தற்போதைய வேட்பாளர்களும் அவர்களை ஏமாற்றி வருகிறார்கள் என தெரிவித்தார்.