வடக்கின் சுகாதார சேவை கடினமான காலப்பகுதியில் இருக்கின்றது.குறிப்பாக வைத்தியசாலைகள் வள மற்றும் ஆளணி பாற்றாக்குறைகளுடனேயே இயங்கி வருகிறது.
வடக்கின் 117 வைத்தியசாலைகளில் 15 வைத்தியசாலைகளிற்கு வைத்தியர்கள் இல்லை
41 வைத்தியசாலைகளிற்கு மட்டுமே தாதிய உத்தியோகத்தர்களுக்கான ஆளணி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது 76 வைத்தியசாலைகளுக்கு தாதிய ஆளணியே வழங்கப்படவில்லை.
வடக்கு மாகாண சுகாதாரத்துறையில் சிற்றூழியர்களுக்கு ஏறத்தாழ 73% வீத பற்றாக்குறை நிலவுகிறது .
யாழ் போதன வைத்தியசாலைக்கு மட்டும் 1,200 தாதிய உத்தியோகத்தர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் 657 தாதிய உத்தியோகத்தர்களுக்கான ஆளணி மட்டுமே அனுமதிக்க பட்டுள்ளது. இதில் 573 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள்
இப்போதனா வைத்தியசாலையில் 300 வைத்தியர்களுக்கும் 72 வைத்திய நிபுணர்களுக்குமான ஆளணியிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நடைமுறையில் 175 வைத்தியர்களும் 63 வைத்திய நிபுணர்களுமே பணியாற்றுகின்றார்கள்.
இது போதாதென்று உட்கட்டமைப்பு வசதிகள, வைத்திய உபகரணங்கள் என எண்ணிலடங்காத நெருக்கடிகள் உள்ளது.
யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட மிக பல நாள் நோயாளிகள், உரிய கட்டில் வசதியின்றி நிலத்தில் வைத்தே வைத்தியம் செய்யப்படவேண்டிய நிலை இன்றும் இருக்கிறது.
ஆனால் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு தர வேண்டிய மத்திய சுகாதார அமைச்சிடம் எந்த பதிலுமில்லை
ஆனால் இந்த நெருக்கடிகளை முன்வைத்து அதிகாரிகள் மத்தியிலான கட்டுப்பாடற்ற Unethical மற்றும் வகை தெரியாத மோசடிகளை நியாயப்படுத்தி கடந்து போக முடியாது.
இங்கே பல சந்தர்ப்பங்களில் நோயாளிகள் இம்சிக்கப்படுகின்றார்கள் அலைக்கழிக்கப்படுகின்றார்கள்.
வாசலில் கடமையிலிருக்கும் காவல் ஊழியர்கள் முதல் சில பல வைத்திய அதிகாரிகள் வரை நோயாளிகளை சங்கடப்படுத்துகின்றார்கள்.
இது போதாதென்று மருத்துவ கவலையீனங்கள் அதன் விளைவுகள் என்பன தொடர் கதையாக இருக்கின்றது.
அதே போல தனியார் வைத்தியசாலை தொடர்பான எந்த நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை.
குறிப்பாக சில பவைத்திய அதிகாரிகள் கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றுவது தொடர்பான குற்றச்சாட்டுகளை அமைதியாக கடந்து போகின்றார்கள்.
அதேபோல் தனியார் வைத்தியசாலை நோக்கி கட்டாயப்படுத்தல் முதல் தனியார் வைத்தியசாலை கட்டண கட்டமைப்பு நோக்கிய கேள்விகளுக்கும் யாரிடமும் பதில்லை.
2022 ஆம் ஆண்டிலேயே மருத்துவ அதிகாரிகள் தொடர்புபட்டதாக சொல்லப்பட்ட போதை வியாபாரம் சில மூத்த வைத்திய அதிகாரிகளின் சமூக தளங்களிலேயே பேசு பொருளாக இருந்தது
மிக ஒரு சில மாதங்களுக்கு முன்னர் FB யில் இரு வைத்திய அதிகாரிகளுக்கிடையான கருத்து முரண்பாட்டின் போது பாலியல் இலஞ்சம் தொடர்பான குற்றசாட்டுகளால் ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டார்கள்
அதே போல வைத்திய அதிகாரிகளே இறந்த உடல்கள் கையாளுதல் தொடர்பான நுட்பமான மோசடிகளை ஏற்று கொள்ளுகின்றார்கள்
இவ்வாறு தொடரும் குற்றசாட்டுகள் பல தளங்களிலான நிதி மோசடிகள் வரை நீள்கின்றது.
ஆனால் எச் சந்தர்ப்பத்திலும் குற்றமிழைத்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை . எந்த விசாரணைகளும் நடத்தப்படவில்லை
சில வைத்திய அதிகாரிகளின் மோசமான தவறுகள், அதை மறைக்க துணை போகும் மூத்த நிர்வாகிகளால் நெருக்கடிக்குள் பணியாற்றும் ஒட்டு மொத்த வைத்திய துறையே மாபியா என்கிற அவலத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.
இந்த கொடுமைகளுக்கு மத்தியில் அரசியல் நாடகங்களுக்கும் எந்த முடிவும் இல்லை.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை அபிவிருத்தி குழு என்கின்ற பேரில் EPDP உறுப்பினர்களை மட்டும் கொண்ட குழு ஒன்று சில மாதங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை அபிவிருத்தி குழுவுக்கு நியமிக்கப்படும் நபர்கள் Expertise in Healthcare Management, Financial Acumen,Legal and Regulatory Knowledge,Community Engagement Skills,Strategic Planning,Passion for Healthcare Improvement போன்ற அடிப்படை விடயங்களில் குறைந்த பட்ச தேர்ச்சியை கொண்டு இருக்க வேண்டும்.
ஆனால் டக்ளஸ் தேவானந்தா நியமித்த குழுவில் எவருக்கும் எந்த தகுதியும் இல்லை .
இது போதாதென்று ரூபா 130 மில்லியன் மோசடியில் சிக்கிய கெஹலியவிற்கு ஆதரவாக அவரை காப்பாற்ற வியாழேந்திரன், திலீபன், பிள்ளையான் சகிதம் வாக்களித்த டக்ளஸ் தேவானந்தா யாழ் வைத்தியசாலை அதிகாரிகளை அழைத்து அச்சுறுத்தி அரசியல் செய்கின்றார்.
மாவட்ட அரச நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் தலையீட்டை ஏதுப்படுத்துவதை தவிர எதையும் சாதிக்காத ஒருங்கிணைப்பு குழு பேரில் அட்டகாசம் பண்ணுகின்றார்.
ஒரு புறம் ஆளணி நெருக்கடி, உட்கட்டமைப்பு நெருக்கடிகள் என மோசமான சிக்கல்களை எதிர் கொள்ளும் சுகாதாரதுறை மறுபுறம் அரசியல் தலையீடுகள் , வினைத்திறனற்ற நிர்வாகங்கள் , முறைப்படுத்தப்படாத தனியார் சுகாதார கட்டமைப்புகள் என சிக்கலில் சிக்கி தவிர்கின்றது
[குறிப்பு : தரவுகள்-பாராளுமன்றம் Hansard,2022]