இஸ்ரேலை தரைவழியாக தாக்குவதற்கு ஈரான் திட்டம்?

4 months ago



இஸ்ரேல்மீது தரைவழி தாக்குதலை நடத்துவதற்கு ஈரான் திட்டமிட்டு வருகிறது என்று அந்த நாட்டின் அரச சார்பு ஊடகமான மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தமது நாட்டில் வைத்துக் கொல்லப்பட்டமைக்கு பழிவாங்கும் விதமாகவே இந்தப் படையெடுப்பு நடைபெறவுள்ளது என்று கூறப்படுகின்றது.

மேலும், ஈரானில் ஹனியே படுகொலை செய்யப்பட்டமைக்கு அளிக்கப்படும் பதிலடிக்கு இரண்டு பலன்கள் கிடைக்க வேண்டியது அவசியம்.

முதலாவது, ஈரானின் இறையாண்மைக்கு எதிராக 'பயங்கரவாத' செயலில் ஈடுபட்ட குற்றத்துக்காக இஸ்ரேலுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும். இரண்டாவது. ஈரானின் தற்காப்புத் திறனை மேம்படுத்தி, எதிர்வரும் காலங்களில் மீண்டும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் இஸ்ரேல் தடுக்கப்பட வேண்டும்.

இது தவிர, காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பை ஈரானின் பதில் தாக் குதல் குலைக்காமல் பார்த் துக்கொள்ள வேண்டும்.

இதற்கெல்லாம் ஏற்ற வகையில் ஈரானின் பதிலடி இருக்க வேண்டுமென்றால், அது யூத ஆக்கிரமிப்புவாதிகள் ஒருபோதும் எதிர்பாராத விதத்தில் இருக்க வேண்டும். ஒரு வேளை, ஈரானின் ஏவுகணைகளை எதிர்பார்த்து அவர்கள் வானத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தரைவழியாக வழியாக தாக்கப்படலாம். தரைவழி, வான்வழி என இரட்டைத் தாக்குதலாகவும் அது இருக்கலாம் என்று ஈரான் ஐ.நாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் புதிய ஜனதிபதி மசூத் பெஷஸ்கியான் கடந்த மாதம் பதவியேற்றார். இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கடந்த ஜூலை 31ஆம் திகதி இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மைய பதிவுகள்