பொருளாதாரம் வலுப்பெற்றதாக அரசாங்கம் போலியான கோஷம்- விஜித ஹேரத் குற்றச்சாட்டு.

5 months ago


பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாக அரசாங்கம் போலியான கோஷங்களை எழுப்பி வருவதாகத் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றிய அவர், நாட்டில் வசிக்க முடியாது என்ற காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளி நாடுகளுக்குச் சென்றுள்ளதாக குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

முந்தைய காலங்களில் நாட் டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்களையும் சேர்த்து தற்போது மொத்தமாக 40 இலட்சம் பேர் வெளிநாடுகளில் உள்ளனர்.

அவர்கள் 2022ஆம் ஆண்டில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலரையும், 2023ஆம் ஆண்டில் 5.9 பில்லியன் டொலரையும் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

இவ்வாறாக நாட்டில் வசிப் பதற்குப் பொருத்தமற்ற சூழலை உருவாக்கி, இலங்கையர்களை நாட்டிலிருந்து வெளியேற்றிய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அதனூடாக அந்நிய செலாவ ணியை பெருக்கியது.பொருளாதாரத்தை வலுப்படுத்த ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த எந்த முயற்சியி னாலும் இந்த நிலை ஏற்படவில்லை.

பொருளாதாரம் வலுவடைந் திருப்பதாகக் கூறும் அரசாங்கம் எதற்காக இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்கிறது.பொருட்களின் விலை ஏன் பழைய நிலைக்குத் திரும்ப வில்லை.

அரசாங்கம் பொய்களைக் கூறி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முடியாது.மக்கள் தங்களது மன அழுத்தங்களை வெளிப்படுத்துவதற்கு எதிர்வரும் தேர்தலுக்காகக் காத் திருக்கின்றனர் என்றார்.