பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த மருத்துவருக்கு 10வருடங்கள் 10 மாதங்கள் சிறை

6 days ago





பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த மருத்துவருக்கு 10வருடங்கள் 10 மாதங்கள் சிறை 

பௌத்தத்தையும் கிறிஸ்தவத்தையும் இணைத்து ஒரு மதப்பிரிவை உருவாக்கி தன்னைக் கடவுள் போன்று காட்டி சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் மருத்துவர் ஈடுபட்டார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட தோல் மருத்துவருக்கு பத்து வருடங்களும் பத்து மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வின்ட்சர் நகரிலுள்ள மெல்பேர்ன் மெடிக்கல் ஸ்கின் கிளினிக்கின் நிறுவுநரான இந்த தோல் மருத்துவர் 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பியபின் பௌத்தத்தையும் கிறிஸ்தவத்தையும் இணைத்து ஒரு மதப்பிரிவை உருவாக்கி தன்னைக் கடவுள் போன்று காட்டிக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டவர்களின் சிறுமிகளைத் துஷ்பிரயோகம் செய்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தனது சீடர்களின் உண்பது, உறங்குவது குளிப்பது போன்ற சகல நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தியதுடன் வீடுகளுக்குள் நுழையும்போது முழந்தாளிட்டு வணங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கடவுளை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனவும் அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அவர் தனது குருட்டுத்தனமான செயற்பாடுகளுக்கு மதச்சாயம் பூசியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்து கடூழியச் சிறை விதிக்கப்பட்டதுடன் இவரது மருத்துவத் தொழில் அனுமதிப் பத்திரத்தையும் நீதிமன்று ரத்து செய்துள்ளது. 

அண்மைய பதிவுகள்