தென்னிலங்கையின் கட்சிகள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடத் தயாராகி வருகின்றன

2 months ago



தென்னிலங்கையின் முப்பெரும் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடத் தயாராகி வருகின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் குழு மற்றும் சர்வஜன பலய கட்சி ஆகியனவே இவ்வாறு இணைந்து போட்டியிடத் தயாராகின்றன.

இந்த மூன்று கட்சிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் அண்மையில் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது.

அதேவேளை அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து உள்ளாட்சிச் சபைத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என்ற திட்டம் எம்மிடம் உள்ளது என்றும் சர்வஜன அதிகாரம், கதிரைக் கூட்டணி என்பவற்றுடன் இது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

சம்பிக்க ரணவக்கவையும் சந்தித்துள்ளோம். ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாடவுள்ளோம் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அண்மைய பதிவுகள்