அமெரிக்கா செல்லும் கனடியர்கள் தம்முடன் நாய்களை எடுத்துச் செல்வது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க எல்லை பகுதியை கடக்கும் கனடியர்கள் இந்த புதிய நடைமுறையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தரை வழியாக அல்லது வான் வழியாக நாய்களை அழைத்துச் செல்லும் கனடியர்கள் சில சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாய்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு இருக்க வேண்டும் எனவும் நாய்களில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாய்களின் உரிமையாளர்கள் அமெரிக்காவிற்கு பயணங்களை மேற்கொள்ளும் போது ஒரு புதிய பதிவு ஆவணம் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய நடைமுறைகளை பின்பற்ற தவறும் கனடியர்கள் நாய்களுடன் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புதிய நடைமுறையின் கீழ் நாய்களை அழைத்துச் செல்லும் கனடியர்கள் நூற்றுக்கணக்கான டொலர்களைச் செலவிட நேரும் எனவும் ஆவணங்களை பூர்த்தி செய்ய நேரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்களையும் விலங்குகளையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தப் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக கனடிய மிருக வைத்திய ஒன்றியம் தெரிவித்துள்ளது.