அமெரிக்க நீதித்துறை முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.-- அதானிகுழும செய்தித் தொடர்பாளர் தெரிவிப்பு
1 month ago
அமெரிக்க நீதித்துறை முன்வைத்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அதானிகுழும செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெற இலஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித்துறை, பங்குச் சந்தை கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.
இதை முற்றிலுமாக மறுக்கிறோம்.
குற்றம் நிரூபிக்கப்படும் வரை, பிரதிவாதிகள் நிரபராதிகளாகவே கருதப்படுவார்கள்.
வெளிப்படைத் தன்மை, தரமான நிர்வாகம், சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதில் அதானி குழுமம் எப்போதும் உறுதியுடன் செயல்படுகிறது.
நாங்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள். இப்பிரச்னையை சட்டரீதியாக எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்”- என்றார்.