ஐ.நா பிரதிநிதி மன்னார் பயணம்

7 months ago

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் மன்னாருக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மன்னார் நகரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சதொச மனிதப் புதைகுழிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சென்றதுடன், அங்குள்ள நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.