இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் -- அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவிப்பு

ஊடகவியலாளர் இசைப்பிரியா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது தலைவரின் மகன் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் நடந்த கொடூர நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தனித்தனி நிகழ்வுகளாக எடுத்து தனித்தனி நபருக்கான நியாயத்தை வழங்க வேண்டும்.
அதனையும் தாண்டி நாட்டு மக்களின் சுதந்திரம், பாதுகாப்பு என்பவற்றை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம்.
அதேநேரம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது தலைவரின் மகன் பாலச்சந்திரனது மரணச் செய்திகேட்டு தான் துயரமடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஊடகவியலாளர் இசைப்பிரியா மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினது தலைவரின் மகன் பாலச்சந்திரனது மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.
எனினும் இதுவொரு இலகுவான விடயம் அல்ல - என்றார்
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
