இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் ஜனாதிபதி அநுரவிடம் ஒப்படைக்கிறேன்-முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருக்கமாக தெரிவிப்பு.
இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் ஜனாதிபதி அநுரவிடம் ஒப்படைக்கிறேன் - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த ஊடகக் குறிப்பில் தெரிவித்திருந்தார்.
புதிய ஜனாதிபதியாக தெரிவான அநுரகுமார திஸநாயக்கவுக்கு நேற்று அனுப்பி வைத்த ஊடகக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
21ஆம் திகதி - கடந்த சனிக்கிழமை நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் தீர்மானம் ஒன்றை வழங்கியுள்ளனர்.
நாம் அந்தத் தீர்மானத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசின் நல்லிருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்குரோத்து அடைந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக வீழ்ச்சிடைந்திருந்த, மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன்.
அந்த சவாலுக்கு முகங்கொடுக்கின்ற அளவிலான ஆத்ம சக்தி பெரும்பாலானோருக்கு இல்லாதிருந்த சந்தர்ப்பத்திலேயே நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.
வரலாறு எனக்கு வழங்கிய அந்தப் பொறுப்பினை நான் சிறப்பாக நிறைவேற்றினேன்.
இரண்டு வருட குறுகிய காலப்பகுதியினுள் என்னால் இந்த நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது.
எனது அரசியல் வாழ்வில் எனது நாட்டுக்காக செய்யக் கிடைத்த பெறுமதியான கடமைப் பொறுப்பு அதுவாகும் என நான் நம்புகிறேன்.
நான் நாட்டைப் பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் நூற்றுக்கு எழுபது வீதமாகக் காணப்பட்ட பணவீக்கத்தை பூச்சியம் தசம் ஐந்து (0.5%) வரை என்னால் குறைக்க முடிந்தது.
மிகவும் சவால் மிகுந்த தொங்கு பாலத்தில் இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் முடிந்தளவு அதிகபட்ச தூரம் பாதுகாப்பாகக் கொண்டு வந்தேன்.
தொங்குபாலத்தின் முடிவிடம் கண்களுக்கு மிகவும் எட்டும் தூரத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்தப் பாசம் மிகுந்த குழந்தையினை அநுர குமார திஸநாயக்க அவர்களிடம் ஒப்ப டைப்பதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர்.
அநுர ஜனாதிபதி அவர்களே, நீங்களும் நானும் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம்மிகுந்த குழந் தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
இந்தக் குழந்தையை நான் கொண்டு வந்தததை விடவும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் முடிவிடத்துக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட் டாலும், பதவிகளை வகித்தாலும் வகிக்காவிட்டாலும் இந்த நாட்டு மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளை ஏற்புடைய சந்தர்ப்பங்களில் எந்த விதமான தயக்கமும் இன்றி நான் நிறைவேற்றுவேன்.
அத்துடன், எனது ஆட்சி காலத்தினுள் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய, வழங்காத அனைவருக்கும் இந்த நாட்டின் சகல பிரஜைகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள. விரும்புகிறேன் - என்றார்.