வவுனியா ஓமந்தையில் சர்வதேச தரத்திலான விளையாட்டுக் கட்டட தொகுதி இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.
6 months ago





வவுனியா ஓமந்தையில் சர்வதேச தரத்திலான விளையாட்டுக் கட்டட தொகுதி இன்று வெள்ளிக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சுமார் 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான விளையாட்டு கட்டிட தொகுதியானது நீண்ட காலமாக அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு காணப்பட்டது.
இந் நிலையில் கடந்த அரசாங்க காலத்தில் மீளவும் நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன.
இதன் பிரகாரம் குறித்த கட்டிடத் தொகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் நீச்சல் தடாகம் என்பன மேலும் சுமார் 14 கோடி ரூபா ஒதுக்கப்பட்டு முழுமையாக சுமார் 30 கோடி ரூபா செலவில் புனரவைக்கப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
