அமெரிக்கா, இலங்கை, மாலைதீவு, இணைந்து நடத்திய 'Atlas Angel' எனும் கூட்டு இராணுவப் பயிற்சி நிறைவடைந்தது.

5 months ago


அமெரிக்க பசிபிக் விமானப்படை இலங்கை விமானப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய 'Atlas Angel' எனும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியானது இன்று வெள்ளிக்கிழமை (09) நிறைவடைந்துள்ளது.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எக்ஸ் தளத்தில்,

மொன்டானா தேசிய காவலர் படையும் (Montana National Guard), அமெரிக்க பசிபிக் விமானப்படைகளும், இலங்கை விமானப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப்படை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட 'Atlas Angel' எனும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சி நிறைவு பெற்றுள்ளது.

இந்த பயிற்சி நடவடிக்கை இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படும் பேரழிவுகரமான நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மற்றும் அவற்றுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை தரமுயர்த்தும். இதன் மூலம் ஒன்றாக கூடி பாதுகாப்பான மற்றும் நிலையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பேணிப் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாய் கொண்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.