இலங்கையில் மக்களின் சுதந்திரங்களைப் பறிப்பதற்கு சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல் கர் ட்ரக் தெரிவிப்பு.

3 months ago


மக்களின் அடிப்படைச் சுதந்திரங்களைப் பறிக்கும் நோக்கில், இலங்கையில் சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள். சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன - என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல் கர் ட்ரக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 57ஆவது அமர்வு நேற்றுமுன் தினம் ஆரம்பமான நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே. இலங்கையில் மனித உரிமைகள் மிக மோசமான முறையில் மீறப்படுவதாக வோல்கர் ட்ரக் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் மிக மோசமான வகையில் மீறப்படுவதற்கு ஏதுவாகச் சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

எழுந்தமானமான கைதுகள், சித் திரவதைகள் போன்ற கடந்தகால வன்முறைகள் எதிர்காலத்திலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தையே இது தோற்றுவித்துள்ளது.

இலங்கையை வழிக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பும் ஆதரவும் தேவை.

உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இன்னும் உண்மைக்காகவும், நீதிக்காகவும், இழப்பீட்டுக்காகவும் காத் திருக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட நபர்கள் தண்டிக்கப்படாமை ஊழலையும் வன்முறையையும் ஊக்குவிக்கிறது.

இலங்கையில் தேர்தல் காலங்கள் நெருங்குகின்றன. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகம் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

அதிகாரத்தில் இருப்பவர்கள். நடைபெறவுள்ள தேர்தலின் போதும், அதற்குப் பின்னரும், கருத்துச் சுதந்திரம், மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடும் உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

அண்மைய பதிவுகள்