15 மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை.-- வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு
1 month ago
கடந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 15 மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 3,040 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்தார்.
"சிறப்புப் பிரிவுக்கு 3,040 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அன்றாட தீர்வுகளை வழங்கக்கூடிய 1,124 முறைப்பாடுகள் உள்ளன.
மேலும், உள்ளக கணக்காய்வு செயல்முறையின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிறப்பு மோசடி அல்லது ஊழல் நடந்ததா என்பதை கண்டறிய 15 சிறப்பு விசாரணைகளை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.
அவற்றில் 3 தற்போது முறையான உள்ளக தணிக்கைக்கு உட்பட்டுள்ளன.
இன்னும் சில வெளியில் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன. அதற்கான தகவல்களை எடுத்து வருகிறோம்” என்றார்.