யாழ்.கலாசார மத்திய நிலையத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் என மாற்றம்

4 hours ago



யாழ்ப்பாணம் - கலாசார மத்திய நிலையத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் என மாற்றம் செய்யப்பட்டது.

குறித்த பெயர் மாற்றும் வைபவம் நேற்று(18) சம்பிரதாயபூர்வமாக குறித்த கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போது புத்த சாசன சமய            மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இணைந்து பெயரை டிஜிற்றல் திரை மூலம் மாற்றம் செய்தனர்.

இந்த நிகழ்வில் யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதுவர் சாய் முரளி, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, பேராசிரியர்கள், சமய தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் 1.6 பில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்புடன் கடந்த 2023 ஆம் ஆண்டு குறித்த கலாசார மத்திய நிலையம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அண்மைய பதிவுகள்