முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் 30 பேர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுப்பு
கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் 30 பேர் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.
இதன்படி, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன், ரெலோவின் வினோ நோகராதலிங்கம், முன் னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, சமல் ராஜபக்ஷ, ஜோன் செனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்த்தன, காமினி லொக்குகே, சிசிர ஜயக்கொடி, விஜயதாச ராஜபக்ஷ. மற்றும், தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு வந்த திஸ்ஸ விதாரண, ஜீ. எல். பீரிஸ், தம்மிக பெரேரா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அலிசப்ரி உள்ளிட்டவர்களும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரியவருகின்றது.
இதேநேரம், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தான் போட்டயிடப்போவதில்லை என்று அறிவித்தார்.
எனினும், அவர் சுமந்திரனின் அழைப்பை ஏற்று தேர்தலில் போட்டியடவுள்ளார் என்று கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.