வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் கைது .
வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்தச் சம்பவம் குறித்து ஈச்சங்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் வவுனியா சுந்தரபுரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வவுனியா சுந்தரபுரம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.