புங்குடுதீவில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திய இருவர் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவிலிருந்து யாழ்ப் பாணத்துக்கு சட்டவிரோதமான முறையில் 100 கிலோ மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு மக்கள் தகவல் வழங்கியிருந்தனர்.
புங்குடுதீவு மடத்துவெளி கடற்படை முகாமுக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, மாட்டிறைச்சி கடத்திய இருவரையும் இதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கடற்படையினர் பிடித்தனர்.
கடற்படையால் பிடிக்கப்பட்டவர்கள் சான்றுப் பொருட்களுடன் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான இருவரும் யாழ். நகரத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, அண்மைக் காலமாக புங்குடுதீவில் மாடுகள் திருடப்பட்டு இறைச்சிக்காக கொண்டு செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பி
டத்தக்கது.