யாழ்.காங்கேசன்துறையில் அடுத்த மாதம் உப்பு உற்பத்தி நிலையம் ஆரம்பம் -- அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தகவல்
1 month ago

யாழ்.காங்கேசன்துறையில், அடுத்த மாதம் உப்பு உற்பத்தி நிலைய மொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
பாராளுமன்றில் உரையாற்றிய அவர், எதிர்வரும் வருடத்தில் நாட்டில் நூற்றுக்கு 70 சதவீதமான உப்பு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.
நாட்டில் இரண்டு உப்பு உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும் அதற்குத் தாம் உறுதியளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது உப்பு தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளோம் அதனை நாம் நிவர்த்தி செய்யவேண்டும்.
இதற்காக உப்பு நிறுவனங்களை அமைக்கவுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி கூறினார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
