யாழ். கிறிஸ்மஸ் ஆராதனைகள் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையிலான கிறிஸ்மஸ் ஆராதனைகள் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றது.
இயேசு பாலனின் பிறப்பைக் கொண்டாடும் கத்தோலிக்க மக்கள் பெருமளவில் வந்து ஆராதனை நிகழ்வுகளில் பங்குகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்ட 51 இராணுவத் தலைமையகம் மற்றும் யாழ். மறை மாவட்ட ஆயர் இல்லம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நத்தார் கரோல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆராதனை நிகழ்வில் யாழ்.மறை மாவட்ட ஆஜர் அதி வணக்கத்துக்கு உரிய ஜஸ்ரின் ஞானபிரகாசம் ஆண்டகை, யாழ். மாவட்ட குரு முதல்வர், யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன், வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் மானத ஜகம்பத், 513 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசாந்த ஏக்கநாயக்க மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.