மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டிருந்த தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணை மீட்டுள்ளனர்.

3 months ago


20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் சிக்குண்டிருந்த தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

தாய்லாந்தின் தலைநகரிலிருந்து இரண்டுகிலோமீற்றர் தொலைவில் உள்ள சமுட் பிரகான் என்ற மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டில் மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டதாக அரோம் அருண்ரோஜ் என்ற 64 வயது பெண் தெரிவித்துள்ளார்.

ஆடைகளை தோய்த்துக் கொண்டிருந்த போது ஏதோ எனது காலில் தீண்டியது போல உணர்ந்தேன் திரும்பிப் பார்த்த போது அது பாம்பு என அவர் தெரிவித்துள்ளார்.

நான் அதனை எதிர்த்து போரட முயன்றேன்,உதவிக்காக கூக்குரலிட்டேன் ஆனால் எவரும் செவிமடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருகட்டத்தில் அது விட்டுவிடும் என நினைத்து அதன் தலையை பிடித்தேன் ஆனால் அது என்னை மேலும் இறுக்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அயலில் உள்ள ஒருவர் இறுதியாக எனது அலறலை செவிமடுத்து உதவியை கோரினார் என தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளேயிருந்த மெல்லிய அலறல் கேட்டதை தொடர்ந்து அரோமின் கதவை உடைத்தோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்டநேரமாக அவரை மலைப்பாம்பு அவரது கழுத்தை நெரித்து வைத்திருக்க வேண்டும் ஏனென்றால் அவரின் உடலின் நிறம் மாறியிருந்தது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் பெண்ணை பிடித்த நான்கு அடி நீளமான 20 கிலோ எடையுடைய மலைப்பாம்பின் படங்கள் வெளியாகியுள்ளன.